இலங்கையில் சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் வீட்டிலிருந்து சுமார் 28 கோடி ரூபா ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருணாகலில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தப்பணம் மீட்கப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பின் போது 18 கிராம் ஐஸ் போதைப்பொருள், கெப் ரக வாகனம் ஒன்றும் மற்றும் வேன் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சிறைச்சாலையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வீட்டிலேயே திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் சிறைச்சாலைக்குள் இருந்தவாறு போதைப்பொருள் வர்த்தகத்தை வழிநடத்தி வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் முதன்முறையாக பெருந்தொகை பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments are closed.