நாடு சுதந்திரமடைந்ததன் பின்னரான வரலாற்றில் மிக முக்கியமானதொரு தருணத்தில் இலங்கை (Sri Lanka) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மூன்று நாள் பயணமாக அண்மையில் இந்தியா சென்றிருந்தார்.
குறித்த அரசியல் பயணமானது சர்வதேச அளவில் மிகவும் பேசுபொருளாக காணப்பட்டது.
காரணம், புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவர் எந்த நாட்டுடன் இணைந்து தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகின்றார் என சர்வதேச ரீதியில் பாரிய எதிர்ப்பார்ப்பு நிலவியது.
சீனாவுக்கு (China) சார்பான இடதுசாரிக்கொள்கையை கடைபிடிக்கும் ஒரு கட்சியாக அநுரகுமார திசாநாயக்கவின் கட்சி காணப்படுவதால் அவரது முதல் பயணம் சீனாவை நோக்கி இருக்கலாம் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இருப்பினும், அவரது முதல் தெரிவாக இந்தியா (India) காணப்பட்ட நிலையில் தற்போது தனது இரண்டாவது பயணத்தை சீனாவை நோக்கி முன்னெடுத்துள்ளார்.