மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

18

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு இன்று (17) பிணை வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17.1.2025) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததற்காக திசர இரோஷன நாணயக்கார டிசம்பர் 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.