களுதாவளைக் கடலில் கரை ஒதுங்கியுள்ள மர்மப் பொருள்!

0 0

மட்டக்களப்பு (Batticaloa) – களுதாவளைக் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றயதினம் (17.01.2025) அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இதனை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாகவும் பின்னர் அதனைக் கரை சேர்த்துள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த மர்மப் பொருள் இரும்பு உலோகத்தினால் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் அடியில் 12LM எனும் எழுத்துக்களும் காணப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இப்பொருளின் மேற்பகுதியில் சிறியளவு வலைமுடிச்சு மற்றும் டயர்களும் காணப்படுகின்ற நிலையில் இது பெரிய கப்பல்களின் ஒரு பாகமாக இருக்கலாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இவ்வாறு மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.