சிஜடியில் மணித்தியால கணக்கில் வாக்குமூலம் வழங்கிய கோட்டாபய

0 1

இன்று முற்பகல் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது

கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று காலை திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பின் பக்க வீதியால் அவர் திணைக்களத்திற்குள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு (Namal Rajapaksa) எதிரான வழக்கொன்றின் ஆவணங்களைப் பரிசோதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது நேற்றைய (16) தினம் கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.