25 சதவீத இறக்குமதி வரி: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க கனடா திட்டம்

19

கனேடிய பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதித்தால், அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்க கனடா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், கனடாவின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 25% இறக்குமதி வரி விதிக்க முடிவு செய்தால், கனடா 150 பில்லியன் கனேடிய டொலர் (அமெரிக்க $105 பில்லியன்) மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடா சில அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க உரிய பட்டியலை உருவாக்கியிருக்கிறது.

அதற்கு முன் பொதுமக்களிடையே ஆலோசனைகள் நடத்தப்படும். திரும்பவும், அமெரிக்காவின் நடவடிக்கைகளைப் பொறுத்து கனடாவின் பதிலடி செயல்பாடுகள் அமையும் என கூறப்படுகிறது.

டிரம்ப், கனடா மற்றும் அமெரிக்காவின் எல்லை பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புகலிட மக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும் வரி விதிக்க முடிவு செய்துள்ளார்.

இதன் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படும்.

கனடா விதிக்கவுள்ள வரியை மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது. டிரம்ப் தனது முடிவை செயல்படுத்தினால், முதலில் சில குறிப்பிட்ட பொருட்கள், குறிப்பாக, புளோரிடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆரஞ்சு ஜூஸுக்கு வரி விதிக்கப்படும்.

அமெரிக்காவின் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்தால், கனடா தனது நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என்று பிரதமர் ட்ரூடோ கூறினார். மேலும், அமெரிக்காவிற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை சமாளிக்க, கனடா நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் மானியங்கள் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்ரூடோ தனது அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தார். அதே சமயம், உள்நாட்டில் அரசியல் குழப்பங்களும் நிலவுகின்றன.

Comments are closed.