வடக்கு விவசாய ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு – வெளியான தகவல்

0 1

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N.Vedhanayagan) அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் வரவுப் பதிவேட்டு இயந்திரத்தில் கையொப்பமிடுவது தொடர்பான விவகாரம் ஆராயப்பட்டு ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக தீர்வு காணப்பட்டுள்ளது.

மாதத்தில் 14 நாள்கள் வெளிக்கள கடமையில் ஈடுபடுவதுடன், பிரதி திங்கட் கிழமைகளில் வரவு பதிவேட்டு இயந்திரத்தில் கையெழுத்திட்டு அலுவலகக் கடமைகளாற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களப் பணிக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சாதகமாகப் பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.