தமிழர் பிரதேசத்தில் தாக்குதலுக்குள்ளான அரச பேருந்துகள்

0 1

வாழைச்சேனை சுங்கான்கேணி பிரதேசத்தில்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து கல்முனைக்கும் (Kalmunai) மற்றும் வாழைச்சேனையில் இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணித்த இரு இலங்கை போக்குவரத்து பேருந்துகள் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் வாழைச்சேனை சுங்கான்கேணி 18 ஆவது மையில் பிரதேசத்தில் நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இனம் தெரியாதேரினால் மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலால் குறித்த இரண்டு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளான பேருந்துகள் வழமை போல போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை காவல் பிரிவிலுள்ள சுங்கான்கேணி பிரதேசத்தில் சம்பவதினமான இரவு 07.30 மணியளில் இனம் தெரியாதோரினால் பேருந்துகள் மீது தீடிரென கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தத நிலையில் பிரயாணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பேருந்துகள் அங்கு நிறுத்தப்பட்டு அதில் இருந்த பிரயாணிகளை வேறு பேருந்துக்கு மாற்றி ஏற்றி அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.