மதுபானம் ஊடாக அரசுக்கு கிடைத்த பில்லியன் வருமானம்

0 1

அரசாங்கத்திற்கு மதுபானம் ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் (Department of Excise) தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டில் மது அருந்துதல் 8.3 மில்லியன் லீற்றர்கள் வரையில் குறைந்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்டுகள் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைத்த வரி வருமானம் 7.7 பில்லியன் அதிகரித்துள்ளது.

சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் ரூபா வரையில் குறைந்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாட்டுடனான வரி அதிகரிப்பு தொடர்பான விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் மதுபான வரிகளில் 20மூ அதிகரிப்பு காரணமாக, மது அருந்துதல் 8.3 மில்லியன் லீற்றர்கள் வரையில் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.