கடத்தப்பட்ட மாணவி : தந்தை வெளியிட்ட தகவல்

0 1

கம்பளை (Gampola)தவுலகல பகுதியில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை, தனது மகள் ஏன் கடத்தப்பட்டார் என்பதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.

தனது மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே காதல் உறவு இல்லை என்று தந்தை தெரிவித்துள்ளார்.

தனது மகளைக் கடத்திய சந்தேக நபர் தனது மருமகன் என்றும், ஆனால் மற்ற இருவரைப் பற்றி தனக்குத் தெரியாது என்றும் கூறிய கடத்தப்பட்ட மாணவியின் தந்தை, இது பணம் பறிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதாகக் கூறினார்.

இதேவேளை மாணவியையும் கடத்திய சந்தேக நபரையும் நேற்று (13) இரவு அம்பாறை(ampara) காவல்துறை அதிகாரிகள் தவுலகல காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சந்தேக நபரும் மாணவரும் இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.