யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சாதனை – மூளைக் கட்டியை கண்டறிய புதிய இயந்திரம்

0 0

மனித மூளையிலுள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு புதிய இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இயந்திரமானது வரதராஜன் டிலக்சன் எனும் மாணவனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி பயின்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி (University of Jaffna College) மாணவராவார்.

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காணும் செயற்றிட்டம் (The Brain Tumour Navigation System Project) வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது.

இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் (Mechatronic Engineering Technology) பிரிவின், இறுதி ஆண்டு மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.