அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) தகாதமுறைக்குட்படுத்தப்பட்ட மாணவி விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court) அளித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23 ஆம் திகதியன்று மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இந்தநிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், சம்பவம் தொடர்பிலான எஃப்ஐஆர் சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தின.