தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51வது நினைவேந்தல்

0 1

நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வொன்று தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்றைய தினம் (10.01.2025) காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் (Jaffna) முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே சிவஞானம் (C.V.K.Sivagnanam) தலைமையில் இடம்பெற்றது.

இதன்பொழுது உயிரிழந்த ஒன்பது உறவுகளையும் நினைவு கூறி அமைக்கப்பட்ட நினைவுத்தூபியின் முன் சி.வீ.கே சிவஞானத்தினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டு அக வணக்கமும் செலுத்தப்பட்டது .

குறித்த நிகழ்விற்கு வடமாகாண அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சி வி கே சிவஞானம் , முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் என பலரும் கலந்திருந்தனர்.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கத்தின் (M. K. Shivajilingam) அழைப்பின் பெயரில் உலகத் தமிழராய்சசி மாநாட்டு படுகொலை நினைவு தூபியில் இன்று காலை 10.30 மணியளவில் நினைவஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.

இதன் பொழுது உயிர் நீத்த உறவுகளை நினைவறுத்தி பொதுச்சுடரினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் ஏற்றி வைத்தார் .

தொடர்ந்து ஈகை சுடர் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டதுடன் , உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.