ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0 2

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு (Galagoda Aththe Gnanasara Thero) 09 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன1,500 ரூபா அபராதம் விதித்துள்ளார்.

ஞானசார தேரர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட முந்தைய பிடியாணையைத் தொடர்ந்து இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.