யாழ். சாவகச்சேரியில் எம்.பியால் பிடிக்கப்பட்ட பாரவூர்தி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

0 1

கடந்த 2ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனினால் வழிமறிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட  சுண்ணக்கற்களை ஏற்றிச்சென்ற பாரவூர்தி நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தினால் இன்று(07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பாரவூர்தியின் சாரதி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குருபரனினால், சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாகவே குறித்த சுண்ணக்கல் ஏற்றி செல்லப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விவகாரம் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் சட்டத்தரணி குருபரனினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரவூர்தி மற்றும் சுண்ணக்கற்களை விடுவித்த நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave A Reply

Your email address will not be published.