வெளிநாடொன்றில் விற்பனையில் சாதனை படைத்த பாரிய மீன்

0 6

ஜப்பானில் நடைபெற்ற மீன் ஏலத்தில் மிகப்பெரிய சூரை மீன் ஒன்று 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

276 கிலோகிராம் எடையுள்ள மோட்டார் சைக்கிள் அளவுக்குப் பெரிய இந்த மீனை நாட்டில் உள்ள பிரபல உணவக உரிமையாளர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஜப்பானிய மீன் ஏல வரலாற்றில் இரண்டாவது அதிக விலைக்கு விற்கப்பட்ட மீன் என்ற சாதனைப் புத்தகத்தில் இந்த மீன் நுழைந்ததாகவும், அதற்கு முன் 2019 இல் 278 கிலோ எடை கொண்ட மீன் 3.1 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மீன்களை கொள்வனவு செய்த ஒனோடெரா குழுமம் தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக அதிக விலைக்கு மீனை கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் நடைபெற்ற மீன் ஏலத்தில் மீன் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு குறித்த நிறுவனம் 7 இலட்சம் டொலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Leave A Reply

Your email address will not be published.