பிக் பாஸ் வீட்டில் மட்டன் விலை இவ்வளவு தானா.. எல்லோரும் ஷாக் ஆன ஒரு விஷயம்

0 1

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 8ம் சீசன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் வெற்றியாளர் யார் என்பது தெரியவந்துவிடும்.

தற்போது போட்டியாளர்கள் 8 பேர் வீட்டுக்குள் இருக்கின்றனர். அதில் ரயான் பைனலுக்கு முன்னேறிவிட்டார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் வாரம்தோறும் நடக்கும் ஷாப்பிங் டாஸ்க் நடந்து இருக்கிறது. அதில் மட்டன் விலை வெறும் 200 என்று தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதனால் போட்டியாளர்களே ஷாக் ஆகி இருக்கின்றனர்.

நாம் ஷோ முடிந்து வெளியில் சென்றால் கூட ஷாப்பிங்கிற்காக மட்டும் இங்கே வந்துவிடலாம் என அருண் பிரசாத் சொல்ல மற்ற போட்டியாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

அந்த வீடியோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.