மீளப்பெறப்படும் மக்களின் நம்பிக்கை: உறுதியளித்துள்ள ஜனாதிபதி அநுர

0 4

சட்டத்தை நிலைநாட்டுவது தொடர்பில் வீழ்ச்சியடைந்துள்ள மக்களின் நம்பிக்கையை மீளமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பாக ஜனாதிபதிக்கும் சட்டமா அதிபருக்குமிடையில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கூறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காக செயற்படும் அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பாகும் எனவும், அரசியல் அதிகாரத்தின் மீதான மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும், மக்களின் எதிர்பார்ப்புகள் வீழ்ச்சியடைய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை வீழ்ச்சியடையச் செய்யும் வகையில் அரசாங்கம் செயற்படாது என்றும், சட்டத்தை நிலைநாட்டுவது தொடர்பில் மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதோடு அதனை மீளமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.