நடிகர் அரவிந்த் சாமியின் மகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்

25

மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி இருவரும் இணைந்து நடித்து வெளிவந்த தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அரவிந்த் சாமி. இதன்பின் ரோஜா படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.

தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். 2006ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் தள்ளி இருந்தார்.

பின் மீண்டும் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் படத்தின் மூலம் நடிகராக 2013ஆம் ஆண்டு ரீ என்ட்ரி கொடுத்தார். கடல் படத்தை தொடர்ந்து மகன் ராஜா இயக்கிய தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவின் டாப் வில்லன்களில் ஒருவராக இடம்பிடித்தார்.

கடந்த 1994ஆம் ஆண்டு காயத்ரி ராமமூர்த்தி என்பவரை திருமணம் செய்தார். 16 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் 2012ஆம் ஆண்டு அபர்ணா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், அரவிந்த் சாமி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும் அரவிந்த் சாமிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என கேட்டு வருகிறார்க

Comments are closed.