கதிர்காம தேவாலயத்தின் தற்போதைய பஸ்நாயக்க நிலமே, திஷான் குணசேகரவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக பிரஜைகள் அமைப்பு குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.
குறித்த முறைப்பாட்டில் திஷான் குணசேகர கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே பதவிக்குப் பொருத்தமற்றவர் என்றும், அவர் மீது குற்றவியல் வழக்கொன்று இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் நிர்மாணிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அரை நிர்மாணப் பணிகளுக்காக தேவாலயத்திற்கு வருகை தந்த பக்தர்களிடம் நன்கொடைச் சீட்டு ஊடாக பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அது தொடர்பான முழுமையான வரவு செலவு அறிக்கை பகிரங்கப்படுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கதிர்காம தேவாலயத்தின் கருவூலம் மற்றும் உண்டியல்கள் போன்றவை தொடர்பில் கணக்காய்வு ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு தனது முறைப்பாட்டில் வலியுறுத்தியுள்ளது.