கனடாவில் பரிதாபகரமாக உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்

0 11

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞர், கார் கதவு திறக்கப்படாமையால் அதிக நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவமானது நேற்று (03) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர், வவுனியா- வீரபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் கனடாவில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த ஜேக்கப் நெவில் டிலக்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.