காசாவில் இஸ்ரேல் நடாத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் பலி

0 4

காசாவில் (Gaza) இஸ்ரேல் (Israel) மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 42 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது நேற்று (3) காசா முனையின் மத்திய காசா, நுசிரத், சவாடா, மஹானி, டிர் அல் பலாக் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடாத்தியதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், வான்வழி கண்காணிப்பு போன்ற பொதுமக்கள் பாதிப்பைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மத்திய காசாவின் ஒரு பகுதியை விட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், அங்கிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்படும் தாக்குதல்களைத் தொடர்ந்து பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இதேவேளை, பணய கைதிகள் மீட்பு, போரை நிறுத்துவது தொடர்பாக ஹமாஸ் (Hamas) அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

கட்டாரின் தலைநகர் தோஹாவில் இந்த பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.