பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
8வது சீசனில் புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கினார், அதோடு பிக்பாஸ் ஆட்டமும் புதியதாக இருக்கிறது.
ஜனவரி மாதம் தொடங்கிவிட்டது, பிக்பாஸ் 8 சீசனும் முடிவுக்கு வரப்போகிறது, ஆனால் வெற்றியாளராக யார் வருவார் என்று கணிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு போட்டியாளர் பெஸ்ட்டாக தெரிகிறார்.
பிக்பாஸ் 8வது சீசன் முடிவை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களும் குறைந்துகொண்டே வருகிறார்கள். ஒவ்வொரு வாரமும் டபுள் எவிக்ஷன் நடந்து வருகிறது.
இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து ராணவ் வெளியேறியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் மற்றொரு போட்டியாளர் மஞ்சரியும் வெளியேறி இருப்பதாக தகவல் வந்துள்ளது.