நுவரெலியாவில் மோட்டார் சைக்கிளும், லொறியும் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவமானது ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை மேபீல்ட் பகுதியில் இன்று (04) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கொட்டகலை பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியில் ஹட்டனிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், லொறி சாரதி கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் திம்புள்ள பத்தனை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட நபர் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.