இலங்கை வரும் வெளிநாட்டவர்களை ஏமாற்றும் மோசடி – பயணிகளுக்கு எச்சரிக்கை

0 3

ஒன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை வாங்கி வெளிநாட்டவர்களுக்கு அதிக விலைக்கு விற்கும் மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

எல்ல பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறான ரயில் டிக்கெட்டுகளை வெளிநாட்டவர்களுக்கு கடைசி நிமிடத்தில் 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதென எல்ல ரயில் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

எல்ல பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் எல்ல பிரதேச செயலகத்தில் சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தலைமையில் நடைபெற்றது.

ரயில் பயணச்சீட்டு மோசடி தொடர்பான தகவல்களை தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார சமர்ப்பித்தார்.

ஒரு குறிப்பிட்ட குழுவினர் ரயில் டிக்கெட்டுகளை ஒன்லைனில் ஒரே நேரத்தில் வாங்கி பின்னர் அதிக விலைக்கு வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பிரச்சினை காணப்படுவதாகவும், அதற்கான தீர்வுகள் காணப்பட வேண்டுமென எல்ல நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

ரயில் டிக்கெட் மாபியாவினால்  இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.