இந்த வருடம் மூன்றாம் உலகப்போர் : பீதியை கிளப்பும் கணிப்பாளர்

0 1

இந்த வருடம் மூன்றாம் உலகப்போர் (world war111)மூளும் என லண்டனை(london) சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா என்பவர் தெரிவித்துள்ளது அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

 இவர் ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு கொரோனா போன்ற பெருந்தொற்று வரப்போகிறது. அதில் லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என கூறியிருந்தார்.

அதன்படி 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்திய நிலையில், தற்போது நிக்கோலசின் கணிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவரது கணிப்பில், மதம் மற்றும் தேசியத்தின் பெயரால் மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வார்கள், அரசியல் படுகொலைகள் நடக்கும், தீமையும், வன்முறையும் இந்த பூமியை கைப்பற்றும்.

அதிக மழை, பேரழிவு தரும் வெள்ளம் இருக்கும். இதனால் லட்சக்கணக்கான வீடுகள் சேதம் அடையும். கடல் மட்டம் வேகமாக உயரும். பல நகரங்கள் நீரில் மூழ்கும். பணவீக்கம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரிட்டன்(uk) இளவரசர் வில்லியம் மற்றும் ஹாரி இடையே சமரசம் ஏற்படும் என அவர் கணித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Leave A Reply

Your email address will not be published.