அவமானப்படுத்தப்படும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த நடக்கப்போவது இதுதான்

0 1

மக்களின் மனதை கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக மாறியுள்ளது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது பணத்தை பற்றிய உண்மை தெரிந்துகொண்ட விஜயா, ரோகிணி மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.

ரோகிணி சொல்லி, மனோஜ் தன்னிடம் இருந்து பணத்தை பற்றிய உண்மையை மறைத்துவிட்டானே என கோபத்தில் இருக்கும் விஜயா, இருவரையும் சேரவிடாமல் பார்த்துக்கொள்கிறார். ரோகிணியை சாப்பிட கூட விடவில்லை.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கவிருப்பது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில், திருமணத்திற்கு பூ அலங்காரம் செய்யும் காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் மீனா, தனது மாடல்களை எடுத்துக்கொண்டு மண்டபத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு மீனாவை சிலர் அவமானப்படுத்திக்கின்றனர். மீனா கொண்டு சென்ற பூ அலங்கார டிசைன்களை குப்பை தொட்டியில் போட்டு உடைக்கின்றனர்.

இதனால் கோபமடையும் மீனா, குப்பையில் தூக்கிட்டு என்னுடைய டிசைன் ஒருநாள் கோபுரமாக மாறும் இந்த தொழிலில் எனக்கென்று தனி அடையாளம் வரும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.