அமைச்சர் வசந்த சமரசிங்க( Wasantha Samarasinghe), வாய்ச் சொல் வீரர் மட்டுமே என்று தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் விமர்சித்துள்ளார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அனுராத தென்னகோன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர்,
அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக 10 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை கூட இறக்குமதி செய்ய முடியாத அரசாங்கம் அரிசி மாபியாக்களை எவ்வாறு இல்லாதொழிக்கும்.
சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 70 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதாக அரசாங்கம் குறிப்பிட்டது.
ஆனால் இதுவரையில் 10 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி கூட இறக்குமதி செய்யப்படவில்லை. தேசிய விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நடைமுறைக்கு சாத்தியமான எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.
வாய்ச்சொல் வீரரான அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமறைவாகியுள்ளார் என்றும் அனுராத தென்னகோன் குற்றம் சாட்டியுள்ளார்.