மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர்கள் போராட்டம்!

0 5

மட்டக்களப்பில்(Batticaloa) கிராமசேவகர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கு எதிராக போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் ஐக்கிய கிராமசேவையாளர் சங்கத்தால் இன்றையதினம் (30.12.2024) மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் சேவை செய்யும் எங்களை காவல்துறை நீங்கள் புறக்கணிப்பது ஏன்? தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தருக்கு நீதி வேண்டும், உடனடி தீர்வு வேண்டும், போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்வர்கள் அங்கிருந்து ஊர்வலமாக நீதிமன்ற வீதி ஊடாக பழைய கச்சேரியை சென்றடைந்து அங்கு இடம்பெற்றுவரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தினையடுத்து அவர்களை வெளியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதுடன் போராட்டத்தில் ஈடுப்பட்ட 5 பேரை மாவட்ட அபிவிருத்திகுழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவிடம் மனு ஒன்றை கையளிப்பதற்கு அனுமதி வழங்கினர்.

இதேவேளை கடந்த 23 ம் திகதி கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு கோரி கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பித்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.