யாழில் ஆபத்தான முறையில் பயணித்த பேருந்து

0 2

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை இடையே போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று வீதியில் ஆபத்தான முறையில் பயணித்தமை தொடர்பில் மக்கள் விசனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த பயணமானது, பயணிகள் மத்தியிலும் வீதியில் பயணித்தவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னால் வரும் வாகனத்துக்கு வழி விடாமல் வீதியின் குறுக்கும் மறுக்குமாக பேருந்தானது பயணத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்த காணொளியானது சமூக ஊடகங்களில் பரவும், நிலையில் பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.