சர்வதேச கிரிக்கட் சம்மேளத்தின் ஐசிசி விருதுகள் 2024இன் முதல் தேர்வுப்பட்டியல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இந்தத் தேர்வுப்பட்டியலில் எட்டு நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில் 2024 டிசம்பர் 29 மற்றும் 30 திகதிகளில்; ஐசிசி விருதுகள் 2024க்கான ஏழு தேர்வுப்பட்டியல்கள் வெளியிடப்படவுள்ளன.
வெற்றியாளர்களை, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் முக்கிய குழு தேர்வு செய்யும். பின்னர் ,இது தொடர்பான முடிவுகள் எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் அறிவிக்கப்படும்.
ஐசிசியின் வளர்ந்து வரும் ஆண்கள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான போட்டியில் நான்கு வலுவான போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன்,பாகிஸ்தானின் சைம் அயூப், மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் சமர் ஜோசப் மற்றும் இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் இறுதிப் பட்டியலில் இணைந்துள்ளனர்
ஐசிசியின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு தென்னாப்பிரிக்க அனைத்துத்துறை வீராங்கனை; அன்னெரி டெர்க்சன், ஸ்காட்லாந்தின் சஸ்கியா ஹார்லி, இந்தியாவின் சி;ரேயங்கா பட்டீல் மற்றும் அயர்லாந்தின் ஃப்ரேயா சார்ஜென்ட் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்
இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் 12 விருதுகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.