என்னதான் நடக்கிறது தமிழரசுவில்…..!

0 1

இலங்கை தமிழரசுக்கட்சி இப்போது எல்லா வகையிலும் குழப்பத்தின் உச்சியில் நிற்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.தாமும் குழம்பி மக்களையும் குழப்பி அவர்களை நம்பித்திரிகின்ற தொண்டர்களையும் குழப்பி இறுதியில் குழப்பத்தின் உச்சியில் நிற்கிறது தமிழரசு.

அந்தக்கட்சிக்கு யார் தலைவர் எனறே தெரியவில்லை.அத்துடன் அந்தக்கட்சியின் பேச்சாளரும் யாரென்று தெரியவில்லை.

தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக செயலாளருக்கு கடிதம் அனுப்பிவிட்டு மீண்டும் தானே தலைவர் என அடம் பிடிக்கிறார் மாவை சேனாதிராஜா.

புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரனோ விழி பிதுங்கி செய்வதறியாது திகைத்து போய் நிற்கிறார்.

இப்போது ஒரு புதிய தலைவர் சிவிகே சிவஞானம். என்னதான் நடக்கிறது பழம்பெரும் கட்சி என சொல்லப்படுகின்ற தமிழரசுவில்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் இடை பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பதில் தலைவராக சிவஞானமும் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜாவும் செயற்படுவார்கள் என்றார்.

ஆனால் கட்சியின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், மாவை சேனாதிராஜா தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் என்கிறார்.

இவர்கள் சொல்வதை பார்க்கும்,கேட்கும்போது தலை சுற்றுகிறது என்கிறது வெகுஜனம். இவர்களின் இந்த கூத்துக்களால் தான் யாழ்ப்பாணத்தவர்கள் அநுர பக்கம் சாய்ந்தனரோ என ஒருவர் கேட்பதுவும் சரிபோலத்தான் படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.