அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களை மலிவு விலையில் சந்தைக்கு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை நேற்று (25) பார்வையிடும் போது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையின் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து கழிவு காகிதங்கள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து பயிற்சி புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் மலிவு விலையில் சந்தைக்கு வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கடதாசி கூட்டத்தபானமும் பல வருடங்களாக நலிவடைந்து வரும் விதம் தனது கண்காணிப்பு பயணத்தின் போது காணப்பட்டதாகவும், இதுவரையில் இருந்த குறைபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய பணியாளர்கள் ஆற்றலுடன் பணியாற்ற முயற்சிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.