இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மொத்தம் 2,371 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றுலா மற்றும் சமூக அதிகாரமளித்தல் போன்ற முக்கிய துறைகளில் ஒதுக்கீடுகள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடுகளில் கல்விக்கு 315 மில்லியன், சுகாதாரத்திற்கு 780 மில்லியன், விவசாயத்திற்கு 620 மில்லியன் மற்றும் மீன்வளத்திற்கு 230 மில்லியன் ரூபாய்களும் உள்ளடங்குகின்றன.
அதன்படி, இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.