ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கையை பிரிக்ஸ்(BRICS) அமைப்பில் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை ஒரு பிழையான முடிவு என கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
இது நிச்சயமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை அதிருப்தியடைய செய்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஒரு அனுபவம் மிக்க அரசியல்வாதியாக இருப்பதால், பிரிக்ஸ் அமைப்பு தொடர்பாக மிகவும் கவனமாக ஆராய்ந்து காய்களை நகர்த்துகின்றார்.
இந்நிலையில், தன்னை பிரிக்ஸ் அமைப்பில் இணைத்துக்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே தன்னுடன் இடைவெளி காக்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்கா மேலும் அதிருப்தியடைந்திருக்கும் என குயின்ரஸ் விளக்கியுள்ளார்.