ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்ற ஏனைய அரசியல்வாதிகளின் பட்டியலையும் வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிந்தவுடன் கூடுதல் விவரங்களை வெளியிடுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், “2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை நான் முன்வைத்தேன்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும் அவ்வாறு செய்த அரசியல்வாதிகள் அதிகம். இன்னும் பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
சில பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் ஆகியோரும் இந்த நிதியில் பணம் பெற்றுள்ளனர்.விரைவில் அந்த பட்டியலை வெளியிடுவேன்.”என்றார்.