கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1040 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) தெரிவித்துள்ளது.
இதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் தொடர்பில் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர் எம் ஏ எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்துள்ளது.
அந்த அறிக்கைகளை வழங்காத வேட்பாளருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால், அந்த வேட்பாளர் மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்பாளராகத் தோற்ற முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.