மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital, Batticaloa) மூக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்ற ஒருவர் ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வைத்தியசாலைக்கு வந்த நிலையில் இன்று வரை தனக்குரிய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்று கவலை வெளியிட்டுள்ளார்.
சத்திரசிகிச்சைக்கான இயந்திரம் பழுதடைந்தமையால் சிகிச்சை வழங்க முடியவில்லை என வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் திருப்பியனுப்பியுள்ளனர்.
அத்துடன் இன்றைய தினம் சத்திரசிகிச்சைக்காக தனக்கு முதல் 20 பேர் காத்திருக்கின்றதாகவும் அவர்கள் வைத்தியசாலைக்கு வந்து திரும்பிச் சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் என்னுடைய நோய் நிலைமை மோசமடைந்து வாசனை உணர்வு இல்லாமல் போயுள்ளதுடன் இயல்பு வாழ்க்கையை வாழ முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.