சுவிட்சர்லாந்து(Switzerland) – பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தின் 10ஆவது ஆண்டு விழா பெரும் சிறப்புக்களுடன் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு கடந்த சனிக்கிழமை(14.12.2024) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பல்சமய இல்லத்தில் பங்களார்களாக உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆர்கென்ரீனா நாட்டின் சுவிற்சர்லாந்து தூதராகப பணிசெய்து கடந்த 2023 முதல் பல்சமய இல்லத்தின் தலைவராக விளங்கும் மத்தியாஸ் சிறப்புரை ஆற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, பேர்ன் மாநில அரசன் அமைச்சரான எவி அலேமான் சிறப்புவரை ஆற்றியுள்ளார்.
இந்த உரைகளைத் தொடர்ந்து சைவநெறிக்கூடத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட வரவேற்பு நடனம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, சிவருசி தர்மலிங்கம் சசிக்குமாருடன் இளைய தமிழ் அருட்சனையர்கள் சண்முகலிங்கம் சபீன், கணேஸ்வரன் திவ்வியன் மற்றும் சசிக்குமார் கரிராம் சங்குநாத இசைவழங்கியுள்ளனர்.
அத்துடன், சுவிட்சர்லாந்து நடுனரசினதும், மாநில மற்றும் ஊராட்சி மன்ற சார்பாளர்களும், சுவிற்சர்லாந்தின் ஆளும் பல்கட்சி உறுப்பினர்களும், தேவாலய திருச்சபை உறுப்பினர்கள், சமய மற்றும் மொழி அறிஞர்கள், பல் மன்றங்களின் உறுப்பினர்கள், பல்சமய இல்லத்தினதும், சைவநெறிக்கூடத்தினதும் உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், வருகை அளித்திருந்த அனைவருக்கும் ஈழத்து தமிழ் சிற்றுண்டி உணவுகளும் விருந்தாக அளிக்கப்பட்டுள்ளது.