வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மலைப்பாம்பு

0 2

பாணந்துறை (Panadura) – வடக்கு கோரகபால பிரதேசத்தில் வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பாம்பு பாணந்துறை வடக்கு காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு பொல்கொட வனப்பகுதியில் விடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக பிரதேச மக்கள் பாணந்துறை வடக்கு காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மலைப்பாம்பை பாதுகாப்பாகப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், பிரதேச மக்களும் காவல்துறையினரும் இணைந்து தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் மற்றும் அட்டிய வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.

எனனும் உரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் பாணந்துறை வடக்கு காவல்துறையினர் குறித்த மலைப்பாம்பை பொல்கொட வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.