2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: ஈபிள் டவர் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்

14

இஸ்லாமிய அரசின் ஆதரவாளர்கள் 2024 பாரிஸ்(Paris) ஒலிம்பிக்கின் போது ஈபிள் டவர் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தீவிர இஸ்லாமியக் குழுவுடன் தொடர்புடைய ஒரு இணையதளத்தில் பிரெஞ்சு தலைநகரில் குண்டு வீசப் போவதாக வெளிப்படையான மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பின்னணியில் ஈபிள் கோபுரத்துடன் கூடிய பெரிய கூட்டத்தின் மீது ‘பரிசு’ என்று பெயரிடப்பட்ட ஒரு பொதியை ட்ரோன் எடுத்துச் செல்லும்   படம் உள்ளது.

மேலும், அல்லாவின் விருப்பத்தின் பேரில் ஒலிம்பிக் போட்டிகள் முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். Lone Wolves எனப்படும் தனியொருவரால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களுக்கு அமைப்பு அல்லது தலைவரின் ஆதரவு அல்லது வழிகாட்டுதல் இருப்பதில்லை என்றே கூறப்படுகிறது.

நேரடியான தொடர்பில்லை என்ற போதும் சில தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றுக்கொள்வதுண்டு.

2016ல் ஆர்லாண்டோ துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்புடன் நேரடி தொடர்பு இல்லாத போதும் அந்த அமைப்பு பொறுப்பேற்றது. குறித்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது பாரிஸ் தாக்குதல் தொடர்பில் வெளியான காணொளியும், இதேப்போன்று ஐ.எஸ் தொடர்பான காணொளிகளை பகிரும் ஒரு தளத்தில் இருந்தே வெளியாகியுள்ளது.

மேலும், உலகின் எந்த பகுதியில் ஐ.எஸ் தொடர்பில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டாலும், இந்த தளத்தில் அந்த சம்பவம் தொடர்பில் தகவல் பதிவேற்றப்பட்டு வருகிறது.

இதனால், பிரான்ஸ் அதிகாரிகள் பாரிஸ் மற்றும் 17 நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் ரி20 உலககிண்ண போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் போது தாக்குதல் நடைபெறும் என இவ்வாறானதொரு படம் வெளியாகிருந்தமையும் குறிப்பி்டத்தக்கது.

Comments are closed.