புதிய சபாநாயகர் பதவிக்காக எதிர்க்கட்சியிலிருந்தும் பெயரினை முன்மொழியவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
அசோக ரன்வல (Asoka Ranwala) சபாநாயகர் பதவியில் இருந்து விலகினால் மட்டும் போதாது, அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் (Colombo) இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஒரு பொறுப்பான கட்சியாக செயற்பட வேண்டும். வெளிப்படையாக, சபாநாயகர் பதவியில் இருந்து விலகினால் மட்டும் போதாது.
இவர்கள் செய்தது நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் செயலாகும். அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும். இது தொடர்பாக எமக்கு கடுமையான விமர்சனங்கள் உள்ளன.
செவ்வாய்கிழமை (17) எதிர்க்கட்சியிலிருந்தும் சபாநாயகர் பதவிக்காக பெயர் ஒன்றை முன்மொழிவோம் என எதிர்பார்க்கிறோம். ஏனென்றால் அடுத்த சபாநாயகராக திசைகாட்டியால் பரிந்துரைக்கப்படும் நபரின் மீதும் நம்பிக்கை இல்லை. இதில் பலத்த சந்தேகம் உள்ளது.