அநுர கட்சி எம்.பிக்களின் கல்வித்தகமை: ஜீவன் சமர்ப்பிக்கவுள்ள முன்மொழிவு

0 5

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க ஒரு தெரிவுக்குழுவை அமைக்கும் முன்மொழிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முன்மொழிவை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி என்பன முன்வைக்க தீர்மானித்துள்ளன.

இது தொடர்பான பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானினால் (Jeevan Thondaman) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியின் சில பிரதிநிதிகளுடைய கல்வித்தரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்தநிலையில் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டே, நுவரெலியாவில் இருந்து நாடாளுமன்றுக்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.