இந்த ஆண்டுக்கான (2024) சிவனொளிபாதமலை (Sri Pada) யாத்திரை பருவ காலம் இன்று (14) முதல் ஆரம்பமாகின்றது.
இதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி (Ratnapura) மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவின் (Wasantha Gunaratne) கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின்படி, சிவனொளிபாதமலை வளாகத்தில் தற்காலிக தங்குமிடங்களை அமைத்தல், பராமரித்தல், கட்டடங்கள் கட்டுதல், யாசகம் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வெளியேற்றுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், சிவனொளிபாதமலை வனப்பிரதேசத்தில் எந்தவொரு காரணத்திற்காகவும் தீ பிடிக்கும் வகையில் செயற்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யாத்திரைக் காலம் அடுத்த வருடம் மே மாதம் 13ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமென வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.