இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தை அவதானிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதாகவும் துறைமுக அதிகார சபைக்கும் பங்கு கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை, ஆனால் தனியார் துறையுடன் இணைந்து துறைமுக அபிவிருத்திக்காக செயற்படுவோம் என அமைச்சர் கூறியுள்ளார்.
Comments are closed.