புலம்பெயர் நயினை தமிழர்களின் கூட்டு முயற்சி: நயினாதீவு வைத்தியசாலைக்கு கிடைத்த சாதனம்

6

நயினாதீவிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களின் கூட்டு முயற்சியின் பயனாக சேர்க்கப்பட்ட பணத்தின் மூலம் ரூபா ஒரு கோடி பெறுமதியான அல்ட்ரா சவுண்ட்ஸ்கானிங் இயந்திரம் நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு இன்று (07.12.2024) கையளிக்கப்பட்டது.

 வைத்தியசாலையின் அவசர தேவையான ஸ்கானர் இயந்திரம் வாங்குவதற்கு ஜேர்மனியில் வசிக்கும் ஜெசிந்தா வாசன் மூலம் 75 இலட்சமும், நோர்வேயில் இயங்கும் நயினை மக்கள் அறக்கட்டளை மூலம் 20 இலட்சமும் ஒதுக்கப்பட்டது.

குறித்த இயந்திரம் இன்று (07/12/2024) சனிக்கிழமை நன்கொடையாளர்களால் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரிடம் நயினாதீவு வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாறு இந்த இயந்திரம் வழங்கப்பட்டமையானது வரவேற்கத்தக்கது எனவும் நயினாதீவில் வாழும் மக்களுக்கு கிடைத்த பேருதவி என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மேலும் பல உதவிகள் எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ளதாக நயினை மக்கள் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Comments are closed.