பெலரூஸில் (Belarus) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த சுஜீவ ருவன் குமார எனும் லொக்கு பெடியை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க (Buddhika Manatunga) தெரிவித்துள்ளார்.
கந்தளாயில் நேற்றையதினம் (06.12.2024) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , பெலரூஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவல் உள்ள சுஜீவ ருவன் குமார அந்நாட்டு காவல்துறையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் போலியானது எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்ததுள்ளார்.
இலங்கையில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள லொக்குபெட்டியை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு நாடு கடத்தல் சட்டத்தை பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்து வர குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.