வங்காள விரிகுடாவில் நாளை உருவாகும் காற்று சுழற்சி : நா. பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

7

வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா (Nagamuthu Piratheeparajah) தெரிவித்துள்ளார்.

குறித்த காற்றுச் சுழற்சி நாளை முதல் (07.12.2024) மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காற்றுச் சுழற்சியானது மேற்கு அல்லது வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 3 நாட்களில், இலங்கைக்கு அண்மித்த பகுதிகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை ஏற்படுகின்ற காற்றுச் சுழற்சியினால் பாரிய பாதிப்புகள் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு எதிர்வரும் 09.12.2024 முதல் 25.12. 2024 வரை மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்றொழிலாளர்கள் எதிர்வரும் 09.12.2024 முதல் மறு அறிவித்தல் வரை கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதெவேளை மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Comments are closed.