அமெரிக்காவின் (USA) வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று (5.12.2024) ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெர்ன்டேலின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியின் 100 கி.மீ., தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டொசினா பகுதியில் கடுமையாக உணரப்பட்டது. இதனால் வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்கள் இருளில் மூழ்கின. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பெரிய அளவில் கடல் கொந்தளிப்பு இல்லாத நிலையில், சிறிது நேரத்துக்கு பின் சுனாமி முன்னெச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளது.

Comments are closed.