யாழில் கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது குழந்தை பலி

4

பருத்தித்துறையில் கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவமானது, பருத்தித்துறை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட திருமாள்புரம், வல்லிபுரம் பகுதியில் இன்று (05) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அதேபகுதியை சேர்ந்த ஜிவன் சுஜித் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

குழந்தை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்த குழந்தையின் சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.